சிதம்பரம் கோவிலில் கட்டுமானப் பணி; விளக்கம் கேட்டு பொது தீட்சிதர்களுக்கு அறநிலையத்துறை கடிதம்


சிதம்பரம் கோவிலில் கட்டுமானப் பணி; விளக்கம் கேட்டு பொது தீட்சிதர்களுக்கு அறநிலையத்துறை கடிதம்
x

கோவிலின் தெற்கு கோபுரம் பகுதியில் புதிய கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தன.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலை பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்த கோவிலில் உள்ள தெற்கு கோபுரம் பகுதியில் பழமை வாய்ந்த கட்டமைப்புகளை அகற்றிவிட்டு புதிய கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறையின் சிதம்பரம் ஆய்வாளர் நரசிங்கபெருமாள், கோவில் பொது தீட்சிதர்களின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், எதற்காக கோவிலில் புதிய கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன, இதற்கான முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மேலும் இந்து சமய அறநிலையத்துறை, தொல்லியல் துறை, நகராட்சி நிர்வாகத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்று கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story