கோவை, திருச்சியில் கலைஞர் நூற்றாண்டு நூலக கட்டுமான பணிகள் விரைவில் தொடக்கம்


கோவை, திருச்சியில் கலைஞர் நூற்றாண்டு நூலக கட்டுமான பணிகள் விரைவில் தொடக்கம்
x

கோப்புப்படம்

கோவை, திருச்சியில் கலைஞர் நூற்றாண்டு நூலக கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

சென்னை,

மதுரையில் புதுநத்தம் சாலையில் நவீன கட்டுமான அம்சங்களுடன் கூடிய பிரமாண்டமாக கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு ஜூலை 15-ந்தேதி திறந்து வைத்தார். இந்த நூலகம் தற்போது மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் செயல்பட்டு வருகிறது.

இதனையடுத்து திருச்சி, கோவையில் கலைஞர் பெயரில் நூலகம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் 110- விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதற்காக திருச்சியில் பல்வேறு இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. திருச்சியில் டி.வி.எஸ். டோல்கேட் அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. முறையாக இதற்கான அனுமதி பெறப்பட்டதும் நூலகம் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க வாய்ப்பு உள்ளது.

அதேபோல், கோவையில் கலைஞர் நூலகம் கட்டுவதற்காக பல இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசீலனை நடந்து வருகிறது. அதன் அடிப்படையில் கோயம்புத்தூர் காந்தி நகர் பஸ் பணிமனை எதிர் திசையில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இங்கு நூலகம் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. நூலக கட்டுமான பணிகளை துரிதப்படுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


Next Story