ரூ.2¾ கோடி மதிப்பீட்டில் காய்கறி மார்க்கெட் கட்டும் பணி


ரூ.2¾ கோடி மதிப்பீட்டில் காய்கறி மார்க்கெட் கட்டும் பணி
x

பட்டுக்கோட்டை நகராட்சியில் ரூ.2¾ கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் காய்கறி மார்க்கெட் பணிகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை நகராட்சியில் ரூ.2¾ கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் காய்கறி மார்க்கெட் பணிகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

பட்டுக்கோட்டை நகராட்சி சார்பில் காசாங்குளம் வடகரையில் ரூ.2 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் 1 ஏக்கரில் இறைச்சி, மீன், காய்கறி உள்ளிட்ட 60 கடைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. பட்டுக்கோட்டை நகரில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்திருந்த மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் காய்கறி மார்க்கெட் கட்டும் பணியை திடீர் ஆய்வு செய்தார். அவரை நகர் மன்ற தலைவர் சண்முகப்பிரியா, நகராட்சி ஆணையர் சவுந்தரராஜன், என்ஜினீயர் குமார் ஆகியோர் வரவேற்றனர். நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத்தலைவர் சுரேஷ், நகர தி.மு.க. செயலாளர் செந்தில்குமார் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான முகாம்

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் அன்பழகன் முன்னிலை வகித்தார். முகாமை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார். முகாமில் தண்டுவடம் பாதிக்கப்பட்ட 17 பேருக்கு ரெயிலில் பயணம் செய்ய சலுகை கட்டண சான்றிதழ், மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. மேலும் 17 பேருக்கு இ.சி.ஜி., எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், ரத்த பரிசோதனை, யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் தஞ்சை மருத்துவக்கல்லூரி நரம்பியல் நிபுணர் டாக்டர் சாந்தபிரபு, சிறுநீரக அறுவை சிகிச்சைப்பிரிவு நிபுணர் டாக்டர் ரவி, கண் டாக்டர் காமேஸ்வரி ஆகியோர் பரிசோதனைகள் செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கினர். நிகழ்ச்சியில் துைண போலீஸ் சூப்பிரண்டு பிரிதிவிராஜ் சவுகான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் திலகம் வரவேற்றார். முடிவில் தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பு தஞ்சாவூர் மாவட்ட தலைவர் ஜெயராஜ் நன்றி கூறினார்.


Next Story