ரூ.3½ கோடியில் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டும் பணி
ரூ.3½ கோடியில் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டும் பணியை கலெக்டர் ஷ்ரவன்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
ரிஷிவந்தியம்,
ரிஷிவந்தியம் ஒன்றிய பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டம் பகண்டை கூட்டுரோட்டில் உள்ள ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்தது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஒன்றிய பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து ரூ.3 கோடியே 44 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுமான பணியை கலெக்டர் ஷ்ரவன்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணியை விரைந்து முடிக்குமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். அப்போது வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மாவட்ட திட்ட இயக்குனர் மணி, உதவி இயக்குனர் ஊராட்சிகள் ரத்தினமாலா, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் மலர்விழி, ஒன்றியக்குழு தலைவர் வடிவுக்கரசி சாமி சுப்பிரமணியன், துணைத்தலைவர் சென்னம்மாள் அண்ணாதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரங்கராஜன், துரைமுருகன், உதவி பொறியாளர்கள் திருமணிகண்டன், சாமிதுரை, மேலாளர்கள் தினகர்பாபு, சுதாகர் உள்பட பலர் உடன் இருந்தனர்.