ரூ.25.76 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி ; எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
படுக்கப்பத்து, பிச்சிவிளையில் ரூ.25.76 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் யூனியன் படுக்கப்பத்து பஞ்சாயத்தில் மாவட்ட ஊராட்சி நிதியில் ரூ.13.16 லட்சம் மதிப்பில் முஸ்லிம் கோவில் முதல் குமரன் வீடு வரையும், பள்ளக்குறிச்சி பஞ்சாயத்து பிச்சிவிளை கீழத்தெருவில் மாவட்ட ஊராட்சி நிதி ரூ.12.60 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி தலைமை தாங்கினார். படுக்கப்பத்து பஞ்சாயத்து தலைவர் தனலட்சுமி சரவணன், யூனியன் ஆணையர் ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் பிச்சிவிளையில் பெருத்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து அங்குள்ள மக்களிடம் மனுக்கள் பெற்றார். இதில் வட்டார தலைவர்கள் பார்த்தசாரதி, சக்திவேல்முருகன், மாவட்ட மருத்துவ பிரிவு டாக்டர் ரமேஷ்பிரபு, மாவட்ட பொருளாளர் எடிசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பெரியதாழை சுரேஷ், மத்திய ஒன்றிய தி.மு.க. செயலர் பொன்முருகேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் இந்திரகாசி, ராமநாத ஆதித்தன், ஜெயராமன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.