சாத்தான்குளம் யூனியனில் ரூ.51.15 கோடியில் புதிய சாலைகள் அமைக்கும் பணி
சாத்தான்குளம் யூனியனில் ரூ.51.15 கோடியில் புதிய சாலைகள் அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் யூனியனில் முதல்-அமைச்சரின் கிராமச்சாலை மேம்பாட்டு திட்டத்தில் கீழசடையன்கிணறு கிராமம், அச்சம்பாடு- ஆனந்தபுரம் இடையே, கீழ எழுவரைமுக்கி- பிள்ளைவிளை இடையே, கீழ பன்னம்பாறை, கீழ அமுதுண்ணாக்குடி, கீழ கோமானேரி, கீழ மேட்டுக்குடியிருப்பு, கீழ ஞானியார்குடியிருப்பு உள்ளிட்ட 10 இடங்களில் ரூ.51 கோடியே 15 லட்சத்தில் புதிய சாலைகள் அமைக்கும் பணி தொடக்க விழா நடந்தது. யூனியன் தலைவர் ஜெயபதி தலைமை தாங்கினார். யூனியன் ஆணையாளர்கள் ராணி, சுரேஷ், தாசில்தார் ரதிகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய சாலைகள் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பஞ்சாயத்து தலைவர்கள் செல்வகனிசெல்லத்துரை, அழகேசன், பாலமேனன், முருகன், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப், மத்திய ஒன்றிய செயலாளர் பொன்முருகேசன், சாலை பாதுகாப்பு நுகர்வோர் குழு உறுப்பினர் போனிபாஸ், மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் சங்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.