செங்கல்பட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி - அமைச்சர்கள் நேரில் ஆய்வு
செங்கல்பட்டில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு தேர்வாகியுள்ள இடத்தை அமைச்சர்கள் முத்துசாமி, அன்பரசன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டத்தில் நகரத்தின் மத்தியில் பேருந்து நிலையம் உள்ளதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த நகரின் வெளியே பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது.
புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு, நகரின் வெளியே நேதாஜி நகர் பகுதியில் இடமும் தேர்வு செய்யப்பட்டது. இந்த இடத்தை தமிழக வீட்டுவசதி வாரியத்துறை அமைச்சர் முத்துசாமி, தமிழக சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
புதிய பேருந்து நிலையத்திற்கான வரைப்படத்தை பார்வையிட்டதோடு, மேற்கொண்டு நடைபெற உள்ள பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்திடம் அவர்கள் கேட்டறிந்தனர்.
Related Tags :
Next Story