மன்னார்குடியில் ரூ.46½ கோடியில் ஒருங்கிணைந்த நவீன பஸ் நிலையம் கட்டும் பணி


மன்னார்குடியில் ரூ.46½ கோடியில் ஒருங்கிணைந்த நவீன பஸ் நிலையம் கட்டும் பணி
x
தினத்தந்தி 29 Sept 2023 12:45 AM IST (Updated: 29 Sept 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடியில் ரூ.46½ கோடியில் ஒருங்கிணைந்த நவீன பஸ் நிலையம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதை அமைச்சர் ஆய்வு செய்தார்.

திருவாரூர்

மன்னார்குடியில் இருந்த பஸ் நிலையம் மற்றும் சந்தைப்பேட்டை பஸ் நிலையம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒருங்கிணைந்த நவீன பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. நகர்ப்புற மேம்பாட்டு கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.46 கோடியே 50 லட்சம் மதிப்பில் இந்த நவீன பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, கட்டுமான பணிகள் குறித்து அதிகாரிகளை கேட்டறிந்தார். மேலும் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே முடித்து பஸ் நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தினார். ஆய்வின் போது மன்னார்குடி நகர சபை தலைவர் மன்னை சோழராஜன், நகராட்சி ஆணையர் நாராயணன், நகர தி.மு.க. செயலாளர் வீரா.கணேசன் மற்றும் உடன் இருந்தனர்.


Next Story