செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க பரிசீலனை
திருச்செந்தூர் ரெயில்வே நிலையத்தில் அம்ரூத் பாரத் திட்டத்தில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் ரெயில்வே நிலையத்தில் அம்ரூத் பாரத் திட்டத்தில் ரூ.8.16 கோடி செலவில் வளர்ச்சி மற்றும் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவஸ்தவா நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருச்செந்தூர் ரெயில்வே நிலையத்தில் அம்ரூத் பாரத் திட்டத்தில் ரூ.8.16 கோடி செலவில் விரிவாக்க பணிகள் மற்றும் புதிய கட்டிட பணிகள் நடைபெற்று வருகின்றன. பெரிய ரெயில்வே நிலையங்களுக்கு இணையாக இந்த ரெயில்வே நிலையம் அனைத்து வசதிகளுடன் தரம் உயர்த்தப்படும். இந்த பணிகள் இந்தாண்டு இறுதிக்குள் நிறைவடையும்.
செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த ரெயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க பரிசீலிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story