ஆத்மலிங்கேஸ்வரர் கோவிலில் நந்திசிலை பிரதிஷ்டை
ஆத்மலிங்கேஸ்வரர் கோவிலில் நந்திசிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
சேலம் அயோத்தியாபட்டணம் அருகே வலசையூரில் ஆத்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரே கல்லில் வடிமைக்கப்பட்ட 70 டன் எடை கொண்ட மகா நந்தி சிலை அமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த சிலைக்கு கலச தீர்த்த அபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஆத்ம முத்ரா அறக்கட்டளை நிர்வாகி ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மணிசங்கர், செந்தில்குமார், ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழா கமிட்டி செயலாளர் சக்திவேல் வரவேற்றார். பாலசந்தர் இறைவணக்கம் பாடினார்.
சேலம் சிட்டிபாபு ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் நரசுஸ் சிவானந்தம், ராசி சரவணன், தங்கதுரை, ஆசைதம்பி, தேவராஜன், மாரிமுத்து, கணேசன், சவுந்தரராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவிந்தராஜ், கேசவன், சதாசிவம், பாலு, மனோகர், சுமதி, பரமேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர். குணாளன் நன்றி கூறினார்.