படிக்கட்டில் தொங்கியதால் இறக்கிவிட்ட நடத்துநர்: ஆத்திரத்தில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர்
பஸ்சின் உள்ளே வருமாறு கூறியதால் நடத்துநரிடம் வாலிபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மதுரை,
மதுரை மாவட்டம் மேலூர் அரசு போக்குவரத்து கிளையை சேர்ந்த டவுன்பஸ் ஒன்று சிவகங்கையில் இருந்து மேலூருக்கு நேற்று காலை வந்தது. அதில் 22 வயதுடைய வாலிபர் ஒருவர் படிக்கட்டில் தொங்கியபடி வந்தார். அவரை உள்ளே வருமாறு நடத்துநர் ராமன் கூறினார். இதனால் அந்த வாலிபர், கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து பாதிவழியிலேயே வாலிபர் இறக்கிவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் பஸ்சை பின்தொடர்ந்து வந்து மேலூரில் பஸ்சின் முன்பக்க கண்ணாடியை கற்களால் தாக்கி உடைத்து விட்டு தப்பி விட்டார். இதில் பஸ் டிரைவர் வேலவேந்தன் காயம் அடைந்து மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின்பேரில் மேலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story