கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா


கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா
x

பிலிக்கல்பாளையம், ஒலப்பாளையத்தில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

நாமக்கல்

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையத்தில் மாரியம்மன் திருமண மண்டபத்தில் கபிலர்மலை ஒன்றிய ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

விழாவில் கபிலர்மலை ஒன்றிய குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பிரபா வரவேற்றார். கபிலர்மலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜே.பி.ரவி, பிலிக்கல்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை லோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடந்து 50-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு வளையல், மஞ்சள், குங்குமம் மற்றும் விழிப்புணர்வு புத்தகம் ஆகியவைற்றை வழங்கினர்.

இதேபோல் பரமத்திவேலூர் அருகே உள்ள ஒலப்பாளையத்தில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மோகனூர் ஒன்றிய குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சசிகலா, பாலப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கோகிலவாணி ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினர். ஒலப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கனகுமயில்சாமி கலந்துகொண்டு 50-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு வளையல்கள், மஞ்சள், குங்குமம் ஆகியவற்றை வழங்கினார்.

விழாவில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வடிவேல், ‌ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சமுதாய அமைப்பாளர்கள், சுய உதவிக்குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story