மருந்தகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த கலெக்டர் உத்தரவு


மருந்தகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த கலெக்டர் உத்தரவு
x

மருந்தகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் சட்டம் 1940 மற்றும் விதிகள் 1945 அட்டவணைகள் எச், எச்1, எக்ஸ்-இல் குறிப்பிடப்பட்டுள்ள மருந்துகள் விற்பனை செய்யும் அனைத்து மருந்தகங்களிலும் குற்றவியல் நடைமுறை சட்டம் 1973 பிரிவு 133-ன் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்படும் கடந்த 5-ந்தேதி அன்றைய நாளிலில் இருந்து 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் மருந்து கட்பாட்டு அலுவலர் அல்லது மருந்தக ஆய்வாளர் ஆய்வின் போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாமல் இருந்தால் மருந்தகங்களின் உரிமையாளர் மீது மேற்கண்ட இத்தரவினை பின்பற்றாத காரணத்திற்காக உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்று மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வா்ணா தெரிவித்துள்ளார்.


Next Story