கூட்டப்பனையில் கடல் அரிப்பால் சேதமடைந்த பகுதியை கலெக்டர் ஆய்வு


கூட்டப்பனையில் கடல் அரிப்பால் சேதமடைந்த பகுதியை கலெக்டர் ஆய்வு
x

கூட்டப்பனையில் கடல் அரிப்பால் சேதமடைந்த பகுதியை கலெக்டர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி

திசையன்விளை:

நெல்லை மாவட்டம் உவரி அருகே கூட்டப்பனை கடற்கரையில் கடந்த சில நாட்களாக கடல் அரிப்பு அதிகரித்தது. இதனால் அங்கு கடற்கரையில் இருந்த மீன் விற்பனைக்கூடம் நேற்று முன்தினம் திடீரென்று இடிந்து விழுந்தது. தொடர்ந்து அங்குள்ள சாலை மற்றும் குடியிருப்புகளும் கடல் அரிப்பால் சேதமடையும் நிலை உள்ளது.

இதையடுத்து மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் நேற்று கூட்டப்பனைக்கு சென்று, கடல் அரிப்பால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கூட்டப்பனையில் கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தொடர்ந்து கடல் அரிப்பை தடுக்கும் வகையில், கடற்கரையில் தற்காலிகமாக பாறாங்கற்களை கொட்டி தடுப்பு அமைக்கும் பணி தொடங்கியது. திசையன்விளை தாசில்தார் பத்மபிரியா, குட்டம் பஞ்சாயத்து தலைவர் சற்குணராஜ் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story