காஞ்சீபுரம் மாநகராட்சியில் கட்டப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு
காஞ்சீபுரம் மாநகராட்சி கட்டப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வள்ளலார் நகரில், ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளையும், செவிலிமேடு பகுதியில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.75 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள சம்பந்தமூர்த்தி நகர் பூங்காவையும் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து நாகலுத்து மேடு பகுதியில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ், ரூ.2 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் நவீன எரிவாயு தகன மேடையை பார்வையிட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் விவரங்கள் குறித்து அலுவலர்களிடம் மாவட்ட கலெக்டர் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் கண்ணன், மாநகராட்சி பொறியாளர் கணேசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story