காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு


காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 4 Jun 2023 3:54 PM IST (Updated: 4 Jun 2023 4:03 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வுசெய்தார்.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள நுழைவு சீட்டு வழங்கும் மையம், நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் பொது பிரிவு மையம் விபத்து பிரிவு, அவசரகால சிகிச்சை பிரிவு, குழந்தைகள் சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு மையத்தையும், டயாலிஸிஸ் மையத்தையும், கண் சிகிச்சை மையத்தையும் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் ரத்த சேமிப்பு வங்கியும், நோயாளிகளுக்கு மருந்து வழங்கும் இடத்தையும் பார்வையிட்டு மருந்து கையிருப்பை கேட்டறிந்தார்.

ஆஸ்பத்திரியை சுற்றி பார்த்து சுகாதாரமாக வைக்கவும், பொதுப்பணித்துறை மூலம் செயல்படுத்தப்படும் பணிகள் குறித்தும், ஆஸ்பத்திரிக்கு தேவையான உள்கட்டமைப்பு குறித்தும் டாக்டர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின்போது இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) கோபிநாத், தலைமை டாக்டர் கிருஷ்ணகுமாரி மற்றும் மருத்துவ அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story