அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ரூ.58¾ லட்சம் காணிக்கை வசூல்
மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ரூ.58¾ லட்சம் காணிக்கை வசூல்
விழுப்புரம்
மேல்மலையனூர்
மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் ஒவ்வொரு மாதமும் திறந்து எண்ணப்படும். அதன்படி நேற்று அறநிலையத்துறை உதவி ஆணையர் மேல்மலையனூர் ஜீவானந்தம், விழுப்புரம் துணை ஆணையர் சிவலிங்கம், ஆய்வாளர் சங்கீதா அறங்காவலர் குழு தலைவர் சந்தானம் பூசாரி ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில் ரூ.58 லட்சத்து 75 ஆயிரத்து 351 ரூபாய் ரொக்கம், 270 கிராம் தங்க நகைகள், 485 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின்போது அறங்காவலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள், இந்தியன் வங்கி ஊழியர்கள் ஆகியோர் உடன் இருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வளத்தி போலீசார் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story