பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் அபராதம் வசூல் - சென்னை மாநகராட்சி நடவடிக்கை


பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் அபராதம் வசூல் - சென்னை மாநகராட்சி நடவடிக்கை
x

பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் அபராதம் வசூல் செய்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது.

சென்னை

சென்னையில் கடந்த 8-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டியவர்களுக்கும், சுவரொட்டிகள் ஒட்டியவர்களுக்கும் ரூ.9 லட்சத்து 18 ஆயிரத்து 300 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் சென்னையில் பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களுக்கு ரூ.5 லட்சத்து 2 ஆயிரம் அபராதமும், கட்டுமான கழிவுகளை கொட்டியவர்களுக்கு ரூ.3 லட்சத்து 53 ஆயிரத்து 500 அபராதமும், அரசு, மாநகராட்சி கட்டிடங்கள் மற்றும் பொது இடங்களில் விதிகளை மீறி சுவரொட்டி ஒட்டிய 455 பேர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு ரூ.62 ஆயிரத்து 800 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பொது இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டுதல், பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுதல் ஆகியவற்றை தவிர்த்து சென்னையை தூய்மையாக பராமரிக்க முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அதை மீறி செயல்படுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story