எழுமாத்தூர் விற்பனை கூடத்தில் ரூ.45½ லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்

எழுமாத்தூர் விற்பனை கூடத்தில் ரூ.45½ லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்
x

எழுமாத்தூர் விற்பனை கூடத்தில் ரூ.45½ லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்

ஈரோடு

மொடக்குறிச்சி

எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. எழுமாத்தூர், மொடக்குறிச்சி பகுதி விவசாயிகள் 1,199 மூட்டை கொப்பரை தேங்காயை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

இதில் முதல் தரம் கொப்பரை தேங்காய் கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.73.89-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.83.59-க்கும், சராசரி விலையாக ரூ.80.10-க்கும் ஏலம் போனது.

இதேபோல் 2-ம் தரம் கொப்பரை தேங்காய் குறைந்தபட்ச விலையாக ரூ.64.10-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.75.79-க்கும், சராசரி விலையாக ரூ.71.42-க்கும் ஏலம் போனது.

மொத்தம் 58 ஆயிரத்து 735 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய் 45 லட்சத்து 36 ஆயிரத்து 972 ரூபாய்க்கு விற்பனையானது என்று விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Next Story