மொடக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.3¼ லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்


மொடக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.3¼ லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்
x

மொடக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.3¼ லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்

ஈரோடு

மொடக்குறிச்சி

மொடக்குறிச்சி துணை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதற்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 10 ஆயிரத்து 726 தேங்காய்களை கொண்டுவந்தனர். இதில் தேங்காய் (கிலோ) குறைந்தபட்ச விலையாக ரூ.24.09-க்கும், அதிகபட்சமாக ரூ.28.19-க்கும் என மொத்தம் 4 ஆயிரத்து 144 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்து 813-க்கு விற்பனையானது.

இதேபோல் ெகாப்பரை தேங்காய் 122 மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. இதில் முதல் தர கொப்பரை தேங்காய் (கிலோ) குறைந்தபட்ச விலையாக ரூ.79.10-க்கும், அதிகபட்சமாக ரூ.86.69-க்கும், 2-ம் தரம் குறைந்தபட்சமாக ரூ.60.66-க்கும், அதிகபட்சமாக ரூ.74.84-க்கும் என மொத்தமாக 4 ஆயிரத்து 153 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய் ரூ.3 லட்சத்து 29 ஆயிரத்து 623-க்கு விற்பனை செய்யப்பட்டது.

மொத்தமாக தேங்காய், கொப்பரை தேங்காய் ரூ.4 லட்சத்து 39 ஆயிரத்து 436-க்கு விற்பனை செய்யப்பட்டதாக விற்பனைக்கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.


Next Story