வேலூர் கோர்ட்டு வளாகத்தில் தூய்மை பணி


வேலூர் கோர்ட்டு வளாகத்தில் தூய்மை பணி
x

வேலூர் கோர்ட்டு வளாகத்தில் தூய்மை பணி நடந்தது. இதில் நீதிபதிகள் பங்கேற்றனர்.

வேலூர்

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள பொதுஇடங்களில் ஒருமணி நேரம் தூய்மை செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்தார். அதன்படி வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் தூய்மை பணி நடந்தது. வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முருகன் தலைமையில் கோர்ட்டு வளாகத்தில் பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் மரங்களில் இருந்து உதிர்ந்த இலைகள் உள்ளிட்ட குப்பைகள் துடைப்பம் மூலம் பெருக்கி அப்புறப்படுத்தப்பட்டது. இதேபோன்று நீதிபதிகள் குடியிருப்பு வளாகத்திலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் நீதிபதிகள் சிவப்பிரகாசம், ரவிச்சந்திரன், ரேவதி, ராதாகிருஷ்ணன், பார் அசோசியேஷன் தலைவர் அண்ணாமலை மற்றும் வக்கீல்கள், ஊழியர்கள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story