பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: தவறான கேள்விக்கு முழு மதிப்பெண் - தேர்வுத்துறை உத்தரவு
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கில பாடத்தில் 5 மதிப்பெண்கள் போனசாக வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த 6-ம் தேதி தொடங்கி, 20ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. மாநிலம் முழுவதும் 4,167 மையங்களில் 9.2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.
பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் வரும் நாளை முதல் மே 3-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து, ஏற்கெனவே திட்டமிட்டபடி தேர்வு முடிவு மே 17-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக கல்வித் துறை துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கில பாடத்தில் 5 மதிப்பெண்கள் போனசாக வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி தவறாக கேட்கப்பட்ட 3 ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கும், ஒரு 2 மதிப்பெண் கேள்விக்கும் இந்த மதிபெண்களை வழங்கப்பட உள்ளது. மேலும் ஒரு மதிப்பெண் கேள்வி எண்கள் 4, 5, 6 மற்றும் 2 மதிப்பெண் கேள்வி எண் 28க்கும் முழு மதிப்பெண் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.