சென்னை-இந்தோனேசியா இடையே நேரடி விமான சேவை: 11-ந் தேதி தொடங்குகிறது


சென்னை-இந்தோனேசியா இடையே நேரடி விமான சேவை: 11-ந் தேதி தொடங்குகிறது
x

கோப்புப்படம்

சென்னை-இந்தோனேசியா இடையே நேரடி விமான சேவை 11-ந் தேதி தொடங்க உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் இருந்து இந்தோனேசியா நாட்டிற்கு செல்ல வேண்டிய பயணிகள் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு சென்று அங்கிருந்து இணைப்பு விமானங்கள் மூலமாக அங்கு சென்று வந்தனர். உள்நாட்டு விமானங்களில் டெல்லிக்கு சென்று அங்கிருந்தும் இந்தோனேசியா செல்ல வேண்டிய நிலை இருந்தது. இந்தோனேசியா நாட்டிற்கு சென்னையில் இருந்து இதுவரை நேரடி விமான சேவை இல்லை.

இந்த நிலையில், சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இந்தோனேசியா நாட்டிற்கு தினசரி நேரடி விமான போக்குவரத்து சேவை வருகின்ற 11-ந் தேதி முதல் தொடங்க உள்ளது.

இந்தோனேசியா மேடான் நகரில் இருந்து தினமும் மாலை புறப்படும் போயிங் 738 ரக விமானம் இரவு 8.15 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் வந்தடைகிறது. சென்னையில் இருந்து இரவு 9.40 மணிக்கு புறப்படும் விமானம் நள்ளிரவு 2.30 மணிக்கு மேடான் நகருக்கு சென்று அடைகிறது.

இந்தோனேசியாவின் மேடான் நகர் அருகே உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தளமான சுமித்ரா தீவு உள்ளது.

சுமத்திரா தீவுக்கு சுற்றுலா செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இந்த புதிய விமான சேவை மிகுந்த பயன் அளிப்பதாக இருக்கும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story