சென்னை சென்டிரல் - அரக்கோணம் மின்சார ரெயில் பகுதி நேர ரத்து


சென்னை சென்டிரல் - அரக்கோணம் மின்சார ரெயில் பகுதி நேர ரத்து
x

கோப்புப்படம்

பராமரிப்பு காரணமாக சென்னை சென்டிரலில் இருந்து அரக்கோணம், திருத்தணி, திருப்பதி செல்லும் மின்சார ரெயில் பகுதி நேர ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர்,

சென்னை சென்டிரல் - அரக்கோணம் வழித்தடத்தில் அரக்கோணம் பணிமனையில் 12-ம் தேதி (நாளை) மற்றும் 14-ம் தேதி காலை 11.10 மணி முதல் மதியம் 1.10 மணி வரையில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் சில மின்சார ரெயில்கள் பகுதி நேர ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை சென்டிரலில் இருந்து 12-ம் தேதி (திங்கட்கிழமை) மற்றும் 14-ம் தேதி காலை 9. 10, 11 ஆகிய நேரங்களில் புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில் திருவள்ளூர் - அரக்கோணம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. மேலும், அரக்கோணத்தில் இருந்து 12-ம் தேதி (திங்கட்கிழமை) மற்றும் 14-ம் தேதி காலை 11.15 மற்றும் மதியம் 12 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் மின்சார ரெயில் அரக்கோணம் - திருவள்ளூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல, சென்னை சென்டிரலில் இருந்து நாளை (திங்கட்கிழமை) மற்றும் 14-ம் தேதி காலை 10 மணிக்கு புறப்பட்டு திருத்தணி செல்லும் மின்சார ரெயில் திருவள்ளூர் - திருத்தணி இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, திருத்தணியிலிருந்து 12-ம் தேதி (திங்கட்கிழமை) மற்றும் 14-ம் தேதி மதியம் 12.35 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் மின்சார ரெயில் திருத்தணி - திருவள்ளூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.

மேலும், வேலூரில் இருந்து 12-ம் தேதி (திங்கட்கிழமை) மற்றும் 14-ம் தேதி காலை 10 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில் சித்தேரி - அரக்கோணம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. சென்னை சென்டிரலில் இருந்து 12-ம் தேதி (திங்கட்கிழமை) மற்றும் 14-ம் தேதி காலை 9.50 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் சிறப்பு மின்சார ரெயில் சென்னை சென்டிரல் - திருத்தணி இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story