சிறப்பு மருத்துவ முகாமில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு


சிறப்பு மருத்துவ முகாமில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு
x

சிறப்பு மருத்துவ முகாமில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

செங்கல்பட்டு

தமிழக அரசின் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பன்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீடு அட்டை பதிவு செய்யும் முகாம் வண்டலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஓட்டேரி விரிவு பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. அப்போது திடீரென செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் சிறப்பு முகாமில் அமைக்கப்பட்டு இருந்த ரத்த அழுத்தம், சிறுநீர், எக்கோ, இசிஜி, மார்பக புற்றுநோய், தொழுநோய், காசநோய் கருப்பைவாய் புற்றுநோய் ஆகிய பரிசோதனை மையங்களை ஆய்வு செய்தார். அங்கு பிசியோதெரபி செய்வதற்காக ஏராளமான மூதாட்டிகள் வரிசையில் நின்றபடி காத்திருந்தனர். இதை பார்த்த கலெக்டர் அங்கு இருந்த மருத்துவ பணியாளர்களிடம் கை, கால் மூட்டு வலி இருக்கும் முதியவர்களை நிற்க வைத்தால் எப்படி உடனடியாக அவர்கள் அமருவதற்கு இருக்கைகளை போடுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு குடிநீர் வசதி, உட்பட வசதிகளை செய்யப்பட்டுள்ளதா? என்று அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது அவருடன் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன், வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ்செல்வி விஜயராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story