குண்டூர் ஏரி புனரமைக்கும் பணிகளை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆய்வு


குண்டூர் ஏரி புனரமைக்கும் பணிகளை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆய்வு
x

குண்டூர் ஏரி புனரமைக்கும் பணிகளை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு, முதல்திலை நகராட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதி ரூ.15 லட்சம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நிதி ரூ.15 லட்சம் என மொத்தம் ரூ.30 லட்சத்தில் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி அருகே மற்றும் அம்பேத்கர் சிலை அருகிலும் புதிய பஸ் நிறுத்த நிழற்குடைகள் அமைப்பதற்கான இடத்தை மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். அந்த இடத்தில் அமைந்துள்ள மின்கம்பங்களை அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து, செங்கல்பட்டு நகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண் 3-ல் பிளாக் எண்.7 நகரளவை எண்.418/1 உள்ள குண்டூர் ஏரியினை அம்புருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.294.00 லட்சத்தில் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ள நேரடி ஆய்வு மேற்கொண்டு, அந்த பகுதியில் உள்ள நீர் வெளியேறும் பகுதிகளை பார்வையிட்டு அருகில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நடைபாதை பகுதியில் கம்பி வேலி அமைக்குமாறும் மாவட்ட கலெக்டர் உத்திரவிட்டார். நடைபாதை சுற்றிலும் மரங்கள் நடுமாறும், மேலும் இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் அனைத்து பணிகளும் இந்த மாதம் 31-ந்தேதிக்குள் முடிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுகளின் போது, செங்கல்பட்டு நகராட்சி மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், நகராட்சி ஆணையர் இளம்பருதி, அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி முதல்வர் டாக்டர் ராஜஸ்ரீ, தாசில்தார் தனலட்சுமி ராஜன், நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story