செங்கல்பட்டு: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி விழிப்புணர்வு பேரணி


செங்கல்பட்டு: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி விழிப்புணர்வு பேரணி
x

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறவுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில், 44-வது செஸ் ஒலிம்யாட் போட்டிகள் நடைபெறவுள்ளதை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை இன்று மாவட்ட கலெக்டர் ஆ.ர.ராகுல் நாத் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு பேரணியானது மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கி இராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லூரி அடைந்து மீண்டும் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தை அடைந்தது.

இவ்விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் 350-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். பேரணியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ், அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story