நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது சந்திரயான்-3 லேண்டர்..! சாதித்தது இந்தியா..!
Live Updates
- 23 Aug 2023 11:44 AM IST
சந்திரயான்-3 திட்டத்தை இயக்கும் விஞ்ஞானிகள் யார் யார் தெரியுமா...?
இந்திய நாடு மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் சந்திரயான்-3ன் பாதுகாப்பான தரையிறக்கத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்த இலக்கை அடைய நமது இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்யும் பணி விரைவில் பலன் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்திற்கு பின்னணியில் இருக்கும் விஞ்ஞானிகள் யார் யார்..? இந்திய விண்வெளி திட்டங்களின் முன்னோடிகள் யார் என்பதை அறிந்துகொள்வோம்.
- 23 Aug 2023 11:07 AM IST
நிலவின் தென் துருவத்தில் தடம் பதிக்க உள்ள முதல் நாடு இந்தியா..!
சந்திரயான் - 3 நிலவில் இறங்கும் இடம் தற்போது கணிக்கப்பட்டுள்ளது. நிலவின் போகுஸ்லாவ்ஸ்கி மற்றும் மன்சினஸ் பள்ளத்தாக்கு அருகே தரையிறங்க வாய்ப்பு உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இன்று மாலை 5.40 மணியில் இருந்து தரை இறங்கும் பணி துவங்கிறது.
- 23 Aug 2023 11:00 AM IST
கடைசி 20 நிமிடங்கள் சவாலான தருணம்: மாதவன் நாயர்
நிலவில் சந்திரயான்-3 லேண்டர் தரையிறங்கும் நிகழ்வை அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். கோள்களின் ஆய்வுக்கான மிக முக்கியமான மைல்கல்லாக இந்த திட்டம் இருக்கப்போகிறது. சந்திரனின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து சந்திரனின் மேற்பரப்புக்கு இறங்கும் கடைசி 20 நிமிடங்கள் மிகவும் சவாலான தருணம்.
- 23 Aug 2023 10:58 AM IST
விண்வெளியில் இருந்து சிக்னல் கொடுத்த சந்திரயான் -3
நிலவில் சாதகமாக உள்ள அனைத்து சமிக்ஞைகளும் பதிவு ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. லேண்டரில் இருந்து வரும் தரவுகளை பொறுத்து சமிக்ஞைகள் பதிவேற்றப்படுவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
- 23 Aug 2023 10:37 AM IST
சந்திராயன்-3, நிலவில் இறங்கும் முயற்சி வெற்றி பெறும் - விஞ்ஞானி வெங்கடேஸ்வரன்
கடந்த முறை ஏற்பட்ட தோல்வியில் இருந்து படிப்பினை பெற்று உருவாக்கப்பட்ட, புத்தாக்கம் பெற்ற சந்திராயன்-3, நிலவில் இறங்கும் முயற்சி வெற்றி பெறும் என்று, விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
- 23 Aug 2023 10:32 AM IST
மாணவர்களின் சிறப்பு கண்காட்சி
சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்குவதற்காக நாடு முழுவதும் மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். ஜம்முவில் மாணவர்கள் சிறப்பு கண்காட்சியை ஏற்பாடு செய்து பாடல்களை பாடினர்.
- 23 Aug 2023 9:50 AM IST
வரலாறு படைக்க உள்ள சந்திரயான் - 3
நிலவின் போகுஸ்லாவ்ஸ்கி, மன்சினஸ் பள்ளத்தாக்கு அருகே விக்ரம் லேண்டரை தரையிறக்க இஸ்ரோ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 23 Aug 2023 9:47 AM IST
சந்திராயன் 3 - கிண்டி பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடு
நிலவில் சந்திராயன் 3 லேண்டர் தரையிறங்கும் நிகழ்வைக் கண்டு களிக்க, கிண்டி பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 5 மணி முதல் பொதுமக்கள், மாணவர்கள் பெரிய திரையில் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- 23 Aug 2023 9:00 AM IST
சந்திரயான் 3 வெற்றியடைய இந்தியா முழுவதும் சிறப்பு பிராத்தனை!
சந்திரயான் -3 விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்க வேண்டி, இந்தியா முழுவதிலும் உள்ள கோயில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்களில் மக்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.