நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது சந்திரயான்-3 லேண்டர்..! சாதித்தது இந்தியா..!
Live Updates
- 23 Aug 2023 6:00 PM IST
நிலவை நெருங்கியது லேண்டர். நிலவில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் லேண்டர் உள்ளது
- 23 Aug 2023 5:55 PM IST
சந்திரயான் - 3 விண்கலத்தின் லேண்டர் 15 நிமிடங்களில் 8 கட்டங்களாக தரையிறங்கும்; முதல் கட்டமாக 30 கி.மீ உயரத்திலிருந்து 7.4 கி.மீ உயரமாக குறைக்கப்படுகிறது
- 23 Aug 2023 5:48 PM IST
லேண்டரை தரையிறக்கும் பணி தொடங்கியது. லேண்டரின் வேகம் குறைக்கப்பட்டு வருகிறது. சிக்னல்கள் சரியாக கிடைத்தன.
- 23 Aug 2023 5:42 PM IST
சந்திரயான் - 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை தரையிறக்கும் பணியை 8 கட்டங்களாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது; விக்ரம் லேண்டர் தரையிறங்கும் நிகழ்வின் நேரடி ஒளிபரப்பை இஸ்ரோ துவங்கியுள்ளது.
- 23 Aug 2023 5:41 PM IST
சந்திரயான்-3; இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து நேரலை நிகழ்ச்சி தொடங்கியது
பெங்களூரு,
நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் இன்று மாலை 6 மணி 4 நிமிடத்துக்கு தரை இறக்கப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகளால் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கும் அதிசய நிகழ்வை காண நாடு முழுவதும் மக்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.
இதனை தொடர்ந்து, நிலவில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கும் நிகழ்வை இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து நேரலையாக ஒளிபரப்பும் நிகழ்ச்சி தொடங்கியுள்ளது.
- 23 Aug 2023 4:03 PM IST
சந்திரயான்-3 மனித இனத்திற்கு ஆச்சரியம் தரும் விசயம்; இஸ்ரோ நிறுவனரின் மகன் பேட்டி
ஆமதாபாத்,
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) நிறுவனர் விக்ரம் சாராபாயின் மகன் கார்த்திகேய சாராபாய் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் இந்த சந்திரயான்-3 நிகழ்வு, மனித இனத்திற்கு ஆச்சரியமளிக்கும் விசயம். ஏனெனில், நிலவின் தெற்கு பகுதியில் யாரும் தரையிறங்க முடியவில்லை என கூறியுள்ளார்.
- 23 Aug 2023 3:03 PM IST
இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் நிகழ்வுக்காக இஸ்ரோவுடன் தென்னாப்பிரிக்காவில் இருந்து காணொலி வாயிலாக பிரதமர் மோடி இணைய உள்ளார். நிலவில் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு பிறகு, இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி.
- 23 Aug 2023 2:57 PM IST
காரைக்குடி: அழகப்பர் பூங்காவில் சந்திரயான் 3 நிலவில் தரையிரங்கும் நேரலை நிகழ்வு
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக அழகப்பர் பூங்காவில் இன்று மாலை 6 மணிக்கு சந்திரயான் 3 நிலவில் தரையிரங்கும் நேரலை நிகழ்வை, எல்இடி திரையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது!
- 23 Aug 2023 1:07 PM IST
நிலவில் மாலை 5.44 மணிக்கு லேண்டர் தரையிறங்கும் பணி
முதற்கட்டமாக லேண்டரில் பொருத்தப்பட்ட ராக்கெட் எஞ்சின் எரியூட்டப்படும் என்றும் சந்திரயான் 3 லேண்டர் தரையிறங்கும் பணி சரியாக மாலை 5.44 மணிக்கு துவங்க இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் 8 நிலைகளில் லேண்டர் நிலவில் தரையிறங்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. ஏஎல்எஸ் எனப்படும் தானியங்கி லேண்டரை தரையிறக்கும் பணியை மேற்கொள்ள உள்ளதாக இஸ்ரோ கூறியுள்ளது.
- 23 Aug 2023 12:15 PM IST
சந்திரயான் - 3 நிலவில் தரையிறங்கும் லேண்டர் - மணற்சிற்பம் வடிவமைப்பு...!
சந்திரயான் - 3 விக்ரம் லேண்டர் இன்று நிலவில் தரையிறங்குவதை முன்னிட்டு, அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் மணற்சிற்பம் வடிவமைத்த மணற்சிற்ப கலைஞர் சுதர்ஷன் பட்னாயக்!