திண்டிவனம் 20-வது வார்டில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை நகரமன்ற தலைவர் ஆய்வு


திண்டிவனம் 20-வது வார்டில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை நகரமன்ற தலைவர் ஆய்வு
x
தினத்தந்தி 22 Oct 2023 12:15 AM IST (Updated: 22 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் 20-வது வார்டில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை நகரமன்ற தலைவர் ஆய்வு செய்தார்.

விழுப்புரம்

திண்டிவனம்,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், நகராட்சி சார்பில் மழைக்காலத்தில் பாதிக்கப்படும் பகுதியில் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திண்டிவனம் 20-வது வார்டில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது சாலை வசதி, வடிகால் வசதி, மழைநீர் தெருக்களில் தேங்காத வகையில் முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் நத்தமேடு நரிக்குறவர் பகுதியிலும் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது வார்டு கவுன்சிலர் ரம்யாராஜா, துப்புரவு அலுவலர் செந்தில்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story