ஓடும் பஸ்சில் பெண்ணிடம் சங்கிலி பறிப்பு


ஓடும் பஸ்சில் பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 14 July 2023 6:45 PM (Updated: 15 July 2023 11:51 AM)
t-max-icont-min-icon

கடையம் அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் சங்கிலி பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தென்காசி

கடையம்:

கடையத்தை அடுத்த பாப்பான்குளம் அருகே உள்ள மைலப்பபுரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் முப்புடாதி மனைவி செண்பகப்பூ (வயது 54). இவர் கடையம் அருகே உள்ள புங்கம்பட்டியில் இருக்கும் தனது மகளை பார்ப்பதற்காக மைலப்பபுரத்தில் இருந்து கடையம் செல்லும் பஸ்சில் ஏறினார். பின்னர் அவர் கடையம் பஸ்நிலையத்தில் இருந்து புங்கம்பட்டிக்கு பஸ் பிடிக்க இறங்கும்போது அவரது கழுத்தில் கிடந்த 20 கிராம் தங்க சங்கிலியை மர்மநபர் யாரோ பறித்து சென்று விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கடையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகிறார்.


Next Story