பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு
சங்கராபுரம் அருகே பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
சங்கராபுரம்,
சங்கராபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சமத்துவபுரம் நரிக்குறவர் காலனி பகுதியில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி பள்ளி செல்லா குழந்தைகளின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் இளையராஜா, புறப்பணி தொடர்பாளர் கவுரி, ஆலோசகர் சரஸ்வதி ஆகியோர் வீடு, வீடாக சென்று பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 9 குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களை பள்ளிக்கு அனுப்பி வைக்க பெற்றோரிடம் அறிவுறுத்தப்பட்டது. அப்போது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி, கிராம நிர்வாக அலுவலர் ராஜா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் கவிதா, ஆசிரியர் பயிற்றுனர்கள் மலர்கொடி, சரசு, குப்புசாமி, புவனேஸ்வரி, ஸ்டாலின், பாலகிருஷ்ணன், சிறப்பாசிரியர்கள் அரிதாஸ், ராஜ்குமார், மேரி ஆகியோர் உடனிருந்தனர்.