மழைநீர் வடிகால்வாய் பணிக்காக தோண்டிய பள்ளத்தில் இறங்கிய சிமெண்டு கலவை லாரி
எண்ணூர் பெருமாள் கோவில் தெருவில் மழைநீர் வடிகால்வாய் பணிக்காக தோண்டிய பள்ளத்தில் சிமெண்டு கலவை லாரி பின்பக்க சக்கரம் இறங்கியது.
சென்னை
எண்ணூர் பெருமாள் கோவில் தெருவில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக லாரி மூலமாக சிமெண்டு கலவை கொண்டு வரப்பட்டு வடிகால்வாய் தொட்டி அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இந்தநிலையில் நேற்று சிமெண்டு கலவை ஏற்றி வந்த லாரி, பின்னோக்கி வந்தபோது மழைநீர் வடிகால்வாய்க்காக தோண்டிய பள்ளத்தில் அதன் பின்பக்க சக்கரம் இறங்கியது. இதனால் லாரியின் பின்பகுதி பள்ளத்தில் கவிழ்ந்து, முன்பகுதி மேலே தூக்கியபடி நின்றது.
அப்போது அருகில் சென்ற மின்சார வயர்களும் துண்டிக்கப்பட்டு அறுந்து விழுந்தது. நல்லவேளையாக அந்த நேரத்தில் அங்கு பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் லாரியை பள்ளத்தில் இருந்து மீட்டு அப்புறப்படுத்தினர்.
Related Tags :
Next Story