நடைபயிற்சி சென்ற டாக்டரிடம் செல்போன் பறிப்பு


நடைபயிற்சி சென்ற டாக்டரிடம் செல்போன் பறிப்பு
x

நெல்லையில் நடைபயிற்சி சென்ற டாக்டரிடம் செல்போன் பறித்து சென்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி

நெல்லை வண்ணார்பேட்டை இந்திரா காலனியை சேர்ந்தவர் முகமதுகான். இவரது மகன் இஸ்மாயில் (வயது 26). நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 7-ந் தேதி மாலையில் நெல்லை வடக்கு பைபாஸ் சாலையில் தாமிரபரணி ஆற்றங்கரையில் நடைபயிற்சி சென்றுவிட்டு நடந்து வந்து கொண்டு இருந்தாா்.

அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் இஸ்மாயிலை வண்ணார்பேட்டையில் இறக்கி விடுவதாக கூறி மோட்டார் சைக்கிளில் ஏற்றி அழைத்து சென்றார். ஆனால் அந்த நபர் அங்குள்ள பாலத்தை கடந்து சிறிது தூரத்தில் மோட்டார் சைக்கிளை சாலையோரம் நிறுத்தினார். அங்கு ஏற்கனவே 2 பேர் காத்திருந்தனர். அங்கு இஸ்மாயிலை இறக்கிவிட்ட போது, 3 பேரும் சேர்ந்து மிரட்டி அவர் வைத்திருந்த சுமார் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

இதுகுறித்து இஸ்மாயில் நேற்று முன்தினம் நெல்லை தச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜனகன் வழக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து போலீசார் சம்பவம் நடந்த இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.


Next Story