வீடியோகால் பிரசவத்தால் சிசு உயிரிழந்த விவகாரம் - மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு


வீடியோகால் பிரசவத்தால் சிசு உயிரிழந்த விவகாரம் - மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு
x

செங்கல்பட்டு அருகே வீடியோகால் மூலம் நடந்த பிரசவத்தில் குழந்தை இறந்தது குறித்து, 6 வாரத்திற்குள் பதிலளிக்குமாறு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் ஆண்டார்குப்பம் பகுதியை சேர்ந்த முரளி என்பவர், தனது மனைவியை இல்லிடு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பிரசவத்திற்காக அனுமதித்துள்ளார்.

இந்நிலையில் மருத்துவர்கள் இல்லாததால், வீடியோகால் மூலம் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது. இதில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்ததால், பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து இல்லிடு அரசு மருத்துவமனை மருத்துவர் பணியிட மாற்றமும், இரண்டு செவிலியர்கள் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டனர். இதுகுறித்து தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த மாநில மனித உரிமை ஆணையம், பொது சுகாதாரத்துறை இயக்குனர் 6 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.


Next Story