தமிழக அமைச்சர்கள் மீதான வழக்கு: பிப்.5 முதல் தினசரி விசாரணை- நீதிபதி ஆனந்த் வெங்கடேசன்


தமிழக அமைச்சர்கள் மீதான வழக்கு: பிப்.5 முதல் தினசரி விசாரணை- நீதிபதி ஆனந்த் வெங்கடேசன்
x

அரசியல்வாதிகளின் வழக்குகளால் பிற வழக்குகள் பாதிக்கப்படக்கூடாது என்பதால் பிற்பகல் 3 மணிக்கு விசாரணை நடைபெறும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்

சென்னை,

சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வளர்மதி ஆகியோரை மாவட்ட அளவில் உள்ள சிறப்பு கோர்ட்டுகள் விடுவித்து தீர்ப்பு அளித்தது. அதேபோல, முன்னாள் அமைச்சர்கள் பொன்முடியை, சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்து வேலூர் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்புகளை எல்லாம் மறுஆய்வு செய்யும் விதமாக, தாமாக முன்வந்து ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு எடுத்தார். இதை எதிர்த்து பொன்முடி தரப்பில் தாக்கல் செய்த மனுவையும் நீதிபதி நிராகரித்தார்.

இந்த நிலையில், 3 அமைச்சர்கள், 3 முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கப்பட்ட வழக்குகள் இன்று ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகளில் பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் தினசரி விசாரணை நடைபெறும் என்று நீதிபதி அறிவித்தார். அரசியல்வாதிகளின் வழக்குகளால் பிற வழக்குகள் பாதிக்கப்படக்கூடாது என்பதால் அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் பிற்பகல் 3 மணிக்கு மேல் நடைபெறும் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story