இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 32 பேர் மீது வழக்கு
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 32 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திண்டுக்கல்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வடமதுரை ஒன்றியக்குழு சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்தும், தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் பணியாற்றுபவர்களின் சம்பளத்தை ரூ.300-ல் இருந்து ரூ.600-ஆக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தியும் நேற்று முன்தினம் வடமதுரையில் மறியல் போராட்டம் நடந்தது.
இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக வடமதுரை போலீசுக்கு புகார் வந்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வடமதுரை ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உள்பட 32 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story