சேலம் கோர்ட்டுக்கு வக்கீல் உடை அணிந்து வந்த 4 பேர் மீது வழக்கு


சேலம் கோர்ட்டுக்கு வக்கீல் உடை அணிந்து வந்த 4 பேர் மீது வழக்கு
x

சேலம் கோர்ட்டுக்கு வக்கீல் உடை அணிந்து வந்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

சேலம்

சேலம்

சேலம் கோர்ட்டுக்கு வக்கீல் உடை அணிந்து வந்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

வழக்குப்பதிவு

சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நேற்று முன்தினம் வக்கீல் உடை அணிந்து ஒரு பெண் உள்பட 6 பேர் சுற்றினர். அவர்களிடம் வக்கீல் சங்க தலைவர் முத்துசாமி விசாரித்தார். அப்போது 4 பேர் நைசாக அங்கிருந்து சென்று விட்டனர். மற்ற 2 பேரிடம் விசாரித்த போது சரியான பதில் அளிக்கவில்லை.

இதையடுத்து 2 பேரையும் அவர் அஸ்தம்பட்டி போலீசில் ஒப்படைத்து புகார் அளித்தார். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த சிவசங்கரன் (வயது 34), வாழப்பாடியை சேர்ந்த அனிதா (36) என்று தெரிந்தது. இதையடுத்து இவர்கள் 2 பேர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோர்ட்டில் வேலை

இது குறித்து போலீசார் கூறும் போது, சென்னையை சேர்ந்த ஒருவர் கோர்ட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறியதை நம்பி லட்சக்கணக்கில் அவரிடம் பணம் கொடுத்ததாகவும், அவர் கூறியபடி வக்கீல் உடை அணிந்து வந்ததாகவும் தெரிவித்து உள்ளனர். மேலும் வக்கீல் உடை அணிந்தபடி 6 பேர் கோர்ட்டுக்கு வந்ததாக கூறி உள்ளனர். எனவே மற்ற 2 பேர் யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறினர்.


Next Story