இரவில் கடற்கரைக்கு செல்லலாமா..? சென்னை ஐகோர்ட் போட்ட உத்தரவு


இரவில் கடற்கரைக்கு செல்லலாமா..? சென்னை ஐகோர்ட் போட்ட உத்தரவு
x

இரவு நேரங்களில் கடற்கரைக்கு செல்லும் மக்களை துரத்தக் கூடாதென காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த ஜலீல் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, கடற்கரை, பூங்காக்களை நாடும் மக்களை, இரவு 9:30 மணிக்கு மேல் காவல் துறையினர் துரத்தி விடுவதாக தெரிவித்துள்ளார்

இது குறித்து டி.ஜி.பி.க்கும், மாநகர காவல் ஆணையருக்கும் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறியுள்ளார். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கடற்கரை செல்லும் மக்களை துரத்தக் கூடாது என காவல் துறையினருக்கு உத்தரவிடவேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுவாமிநாதன், பாலாஜி அமர்வு, தமிழக டி.ஜி.பி. மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.


Next Story