தற்காலிக பஸ் நிலையம் திறக்கப்படுவதால் சோலாரில் ரவுண்டானா அமைக்கும் பணி தீவிரம்


தற்காலிக பஸ் நிலையம் திறக்கப்படுவதால் சோலாரில் ரவுண்டானா அமைக்கும் பணி தீவிரம்
x

தற்காலிக பஸ் நிலையம் திறக்கப்படுவதால் சோலாரில் ரவுண்டானா அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

ஈரோடு

சோலார்

தற்காலிக பஸ் நிலையம் திறக்கப்படுவதால் சோலாரில் ரவுண்டானா அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தற்காலிக பஸ் நிலையம்

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட சோலாரில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. தினமும் 156 பஸ்கள் இங்கு வந்து செல்லும் என்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக 57 பஸ்களும், தனியார் பஸ்கள் 39-ம் மற்றும் இதரகோட்ட பஸ்கள் 60-ம் வந்து செல்ல உள்ளது.

மேலும் இந்த பஸ் நிலையத்துக்கு தினமும் 298 முறைகள் பஸ்கள் வந்து செல்ல உள்ளது. இப்பஸ் நிலையத்தில் இருந்து கரூர் மற்றும் திருச்சி மார்க்கமாக செல்லும் பஸ்கள், வெள்ளகோவில் மற்றும் மதுரை மார்க்கமாக செல்லும் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

ரவுண்டானா பணிகள் தீவிரம்

இந்த நிலையில் சோலாரில் தற்காலிக பஸ் நிலையம் விரைவில் திறக்கப்பட உள்ளது. இதனால் கடந்த மாதம் பயணிகளின் இருக்கைகள் மற்றும் ஊர்களின் பெயர் பலகைகள் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டது.

மேலும் ஏற்கனவே சோலாரில் இருந்த ரவுண்டானா அகற்றப்பட்டு நவீன முறையில் ரவுண்டானா அமைக்கும் பணிகள் பொக்லைன் எந்திரங்களின் உதவியுடன் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சில நாட்களில் ரவுண்டானா பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Related Tags :
Next Story