மாட்டு வண்டி பந்தயம்


மாட்டு வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 12 Oct 2023 4:15 AM IST (Updated: 12 Oct 2023 4:15 AM IST)
t-max-icont-min-icon

கம்பம் உத்தமபுரத்தில் உள்ள மந்தையம்மன் கோவில் திருவிழாவையொட்டி கம்பம்மெட்டு சாலையில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நேற்று நடைபெற்றது.

தேனி

கம்பம் உத்தமபுரத்தில் உள்ள மந்தையம்மன் கோவில் திருவிழாவையொட்டி கம்பம்மெட்டு சாலையில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நேற்று நடைபெற்றது. பெரியமாடு, நடுமாடு, கரிச்சான் மாடு, பூஞ்சிட்டு, தேன்சிட்டு, தட்டான் சிட்டு ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் பந்தயம் நடத்தப்பட்டது. இதில் தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 120-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

கம்பத்தில், கம்பம்மெட்டு சாலையில் உள்ள தனியார் குழந்தைகள் மருத்துவமனை அருகில் தொடங்கி, கம்பம்மெட்டு அடிவாரம் வரை பந்தய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து பந்தயத்தில் கலந்துொண்ட மாட்டு வண்டிகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன. பின்னர் ஒவ்வொரு பிரிவுகளிலும் வெற்றிபெற்ற மாட்டுவண்டிகளின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் மாட்டு வண்டி பந்தயத்தை கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் பார்த்து ரசித்ததுடன், மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.


Next Story