கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு


கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
x

கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கரடிகுளம் கிராமத்தில் கருப்பாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலின் முன்பக்கம் உள்ள கேட்டை உடைத்து உள்ளே நுழைந்து மர்மநபர்கள் உண்டியலை தூக்கிச்சென்று உடைத்து அதில் உள்ள பணத்தை திருடிக்கொண்டு உண்டியலை தூக்கிவீசிவிட்டு சென்றுவிட்டனர். இந்த நிலையில் நேற்று இப்பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டு இருந்தவர்கள் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாத் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story