வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு


வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
x

வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருடுபோனது.

கரூர்

கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் அருகே ஒரம்புப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 44). இவர் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே முத்தூரில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். ஓலப்பாளையத்தில் உள்ள தனது விவசாய நிலத்தில் விவசாயமும் செய்து வருகிறார். முத்தூரில் நிதி நிறுவனத்தை பார்த்துக் கொண்டு அங்கிருந்து வாரத்திற்கு 3 நாட்கள் ஓலப்பாளையம் வந்து விவசாய பணிகளை கவனித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 3-ந் தேதி அன்று வீட்டிற்கு வந்து விவசாய பணிகளை செய்துவிட்டு முத்தூர் சென்று விட்டார். பின்னர் நேற்று முன்தினம் காலை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்தது. அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சந்திரசேகரன் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டுக்குள் இருந்த பீரோவை உடைத்து பீரோவுக்குள் இருந்த ரூ.5 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து சந்திரசேகரன் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் வழக்குப்பதிவு செய்து பீரோவை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Next Story