பித்தளை பாத்திர தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்


பித்தளை பாத்திர தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
x

நெல்லையில் பித்தளை பாத்திர தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை தொழிலாளர் துறை அலுவலகத்தில் பித்தளை பாத்திர தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு ஒப்பந்தத்தை இறுதி செய்ய வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் மோகன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். நெல்லை மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் சரவணபெருமாள், தலைவர் துரை நாராயணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதுகுறித்து நிர்வாகிகள் கூறுகையில், "தொழிலாளர் துறை முன்பு பித்தளை பாத்திர தொழிலாளர்களின் கூலி உயர்வு வழக்கானது 12 முறைக்கு மேல் நடைபெற்ற பொழுதிலும் எவ்வித முடிவும் எடுக்க முடியாத நிலை உள்ளது. இதனால் பித்தளை பாத்திர தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. பித்தளை பாத்திர உற்பத்தியாளர்களுக்கு போதிய அழுத்தம் கொடுத்து கூலி உயர்வு பேச்சுவார்த்தையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்" என்றனர்.

இந்த போராட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட பொருளாளர் ராஜன், சி.ஐ.டி.யு. பித்தளை பாத்திர தொழிலாளர் சங்க நிர்வாகிகள் எஸ்.கே.செந்தில், முத்து, இஸ்மாயில் சேட், ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story