சிறுவன் மர்மச்சாவு-உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியல்


சிறுவன் மர்மச்சாவு-உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியல்
x

நெமிலி அருகே சிறுவன் மர்மமான முறையில் இறந்த வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை

நெமிலி

நெமிலி அருகே சிறுவன் மர்மமான முறையில் இறந்த வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

நெமிலியை அடுத்த கீழ்வெண்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் காளிதாஸ். இவரது மகன் அவினாஷ் (வயது 4). கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அதே கிராமத்தில் உள்ள வயல்வெளியில் சிறுவன் அவினாஷ் மர்மமான முறையில் இறந்து கிடந்தான்.

இந்த சம்பவம் குறித்து நெமிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்தநிலையில் சிறுவன் இறந்த வழக்கில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி நேற்று உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நெமிலியில் பனப்பாக்கம்-அரக்கோணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை

இதுகுறித்து தகவலறிந்ததும் பாணாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி மற்றும் போலீசார் சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது சிறுவன் சாவில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

அதற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story