ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி


ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி
x

திருவையாறு அருகே கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி

தஞ்சாவூர்

திருவையாறு அருகே வைத்தியநாதன்பேட்டை, வடுகக்குடி, மருவூர் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் கொள்ளிடம் ஆற்றில் திருவாரூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் 3 ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் எடுத்துச்செல்வதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல கட்ட போராட்டங்களை நடத்தி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

ஆழ்துளை கிணறு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடுகக்குடி, ஆச்சனூர், மருவூர் உள்ளிட்ட பகுதிகளில் மெயின்ரோடு மற்றும் வடுகக்குடியில் மணல் சேமிப்பு கிடங்கு பகுதியில் ஆங்காங்கே திருவையாறு போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமதாஸ் தலைமையில் திருவையாறு இன்ஸ்பெக்டர் வனிதா, பூதலூர் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் ஆறுமுகம் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார். செயற்பொறியாளர் சேகர் மற்றும் உதவி பொறியாளர்கள் ஆகியோர் 3 பொக்லின் எந்திர உதவியுடன் கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story