பொக்லைன், லாரியுடன் தப்பி ஓட்டம்


பொக்லைன், லாரியுடன் தப்பி ஓட்டம்
x

வைகை ஆற்றில் மணல் அள்ளிய நபர்கள், வருவாய்த்துறையினரை கண்டதும் பொக்லைன் எந்திரம் மற்றும் லாரியுடன் தப்பி ஓடி விட்டனர்.

திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி வீரஆஞ்சநேயர் கோவில் உள்ளது. வைகை ஆற்றுப்படுகையை ஒட்டி உள்ள இந்த கோவிலின் மேற்கு பகுதியில் சித்தர்கள் நத்தம், மல்லியம்பட்டி ஆகிய கிராம மக்களுக்கு செல்ல சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையை துண்டித்த மர்ம நபர்கள், கடந்த சில தினங்களாக மணல் மற்றும் சவுடு மண் அள்ளினர். இதுகுறித்த புகாரின் பேரில், அப்பகுதியில் வருவாய்த்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பொக்லைன் எந்திரம் மூலம் பட்டப்பகலில் லாரிகளில் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். வருவாய்த்துறையினரை கண்டதும் மர்ம நபர்கள் பொக்லைன் எந்திரம் மற்றும் லாரியை ஓட்டியபடி சென்றனர். இதனையடுத்து சித்தர்கள் நத்தம் கிராம நிர்வாக அலுவலர் ஷோபனா மற்றும் கிராம நிர்வாக உதவியாளர்கள் வாகனங்களை மறிக்க முயன்றனர். ஆனால் அதனை பொருட்படுத்தாமல் அவர்கள் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து வருவாய்த்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விசாரணை நடந்து வருகிறது. நிலக்கோட்டை போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story