நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து; மீனவர் மாயம் - ஹெலிகாப்டர் உதவியுடன் தேடும் பணி தீவிரம்


நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து; மீனவர் மாயம் - ஹெலிகாப்டர் உதவியுடன் தேடும் பணி தீவிரம்
x

நடுக்கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் மாயமான மீனவரை ஹெலிகாப்டர் உதவியுடன் தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள மண்டபம் பகுதியைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவரது விசைப்படகில் ரவி, அருள், கண்ணன் உள்ளிட்ட 5 பேர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். இந்நிலையில் நடுக்கடலில் ஏற்பட்ட சூரைக்காற்றால், படகு நிலைகுலைந்து கடலில் மூழ்கியது.

இந்த விபத்தில் 4 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், ஷாஜகான் என்ற மீனவர் மாயமாகி உள்ளார். அவரை தேடும் பணியில் கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் மூலமாகவும், இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்தமான ஹோவர்கிராப்ட் உள்ளிட்டவைகள் மூலமாகவும் போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.


Next Story