பா.ஜ.க. மகளிர் அணியினர்-நிர்வாகிகள் இடையே கடும் வாக்குவாதம்:செயற்குழு கூட்டத்தில் பரபரப்பு
வடலூாில் பா.ஜ.க. நகர செயற்குழு கூட்டத்தில் மகளிர் அணியினர்-நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
வடலூர்,
நகர செயற்குழு கூட்டம்
வடலூர் உள்ள தங்கும் விடுதியில் நேற்று பா.ஜ.க. நகர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட பொதுச்செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். கூட்டத்தில் நகர தலைவர் திருமுருகன், நகர பொதுச்செயலாளர் பாலு, மாவட்ட மகளிர் அணிபொதுச்செயலாளர் சுதா ராஜேந்திரன், நகர செயலாளர் சாம் சுந்தர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றியதற்கும், வந்தே பாரத் ரெயில் இயக்கியதற்காகவும் மத்திய அரசுக்கு நன்றி தெரித்து தீர்மானம் நிறைவேற்றவது உள்ளிட்ட பல்வேறு ஆலேசானைகள் மேற்கொள்ளப்பட்டது.
வாக்குவாதம்
அப்போது ஒரு தரப்பினர் மகளிர் அணியினரை பார்த்து நிர்வாகிகளை மதிக்காமல் தன்னிச்சையாக செயல்பட கூடாது எனக் கூறினார்கள். இதில் இருதரப்புக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து பேசிக்கொண்டனர்.
அப்போது அங்கிருந்த மாவட்ட நிர்வாகிகள் தலையிட்டு அவர்களை, சமாதானப்படுத்தினார்கள். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.