டெல்டா மாவட்டங்களில் இருசக்கர வாகன பழுதுநீக்கும் கடைகள் இன்று இயங்காது


டெல்டா மாவட்டங்களில் இருசக்கர வாகன பழுதுநீக்கும் கடைகள் இன்று இயங்காது
x
தினத்தந்தி 11 Oct 2023 12:15 AM IST (Updated: 11 Oct 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

டெல்டா மாவட்டங்களில் இருசக்கர வாகன பழுதுநீக்கும் கடைகள் இன்று இயங்காது என சங்கத்தினர் தெரிவித்துள்ள்னர்.

மயிலாடுதுறை

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என இந்தியா கூட்டணி அறிவித்துள்ளது. இந்த கடையடைப்பு போராட்டத்துக்கு பல்வேறு சங்கத்தினர் தன்னார்வத்துடன் ஆதரவு தெரிவித்தனர். அந்த வகையில், இப்போராட்டத்துக்கு இருசக்கர வாகன பழுதுநீக்குவோர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மயிலாடுதுறையில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு சங்கத்தின் மாநில செய்தித் தொடர்பாளரும், மாவட்ட தலைவருமான பகவதிகுமார் தலைமை தாங்கினார். சட்ட ஆலோசகர் வேலு.குபேந்திரன், மாவட்ட துணைத் தலைவர்கள் சுந்தர், சந்தோஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் செந்தில் வரவேற்றார். கூட்டத்தின் முடிவில் நிருபர்களிடம் சங்கத்தின் மாநில செய்தித் தொடர்பாளர் பகவதிகுமார் கூறியதாவது:- உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி நீரைத் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து டெல்டா மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ள முழு கடையடைப்பு போராட்டத்தில் இருசக்கர வாகன பழுதுநீக்குவோர் சங்கம் பங்கேற்கிறது. இதனால், டெல்டா மாவட்டங்களில் செயல்படும் 5000-த்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகன பழுதுநீக்கும் கடைகள் இயங்காது என்றார். கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் குமார் நன்றி கூறினார்.


Next Story